search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கட்சி"

    மேகதாது அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சியினரும் முற்றுகையிட வேண்டும் என வைகோ கூறினார். #Mekedatudam #Vaiko

    மதுரை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து 2012-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மேகதாது அணை கட்டினால் மேட்டூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு பகுதி வறண்டுவிடும். அணை கட்டுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக முற்றுகையிட வேண்டும்.

    அப்படி செய்தால்தான் மத்திய அரசு அணை கட்டு வதை தடுக்கும். அணை கட்ட வெளிப்படையாக அனுமதி அளிக்க மாட்டோம் என கூறிய மத்திய அரசு, தற்போது ரகசியமாக ஒப்புதல் கொடுத்துள்ளது.

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

    மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதுதான் சரியாக இருக்கும்.

    மத்திய அரசு, மாநில அரசை காலில் போட்டு மிதித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்து செயல்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ராசா கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekedatudam #Vaiko

    திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.

    திருப்பூர் 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனியின் பிரதான சாலையான கொச்சி-மீன்கரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகும். மேலும் அருகில் கருப்பராயன், கன்னிமான் மற்றும் ஆதிபராசக்தி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளன.

    மேலும் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த சாலை வழியாக மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை இந்த பகுதியில் திறக்கப்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உள்ளது.

    இதனால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான முயற்சியை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 46 மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது. 18 அமர்வுகளாக மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும்  கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.


    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த் குமார், ‘நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைய அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மோடி கேட்டுகொண்டதாக தெரிவித்தார்.

    அனைத்து கட்சியினராலும் முன்வைக்கப்படும் பிரச்சனைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும். நாட்டின் நலன்கருதி இந்த கூட்டத்தொடரை ஒன்றிணைந்த கருத்தொற்றுமையுடன் நடத்தி முடிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியதாகவும் அனந்த குமார் குறிப்பிட்டார். #monsoonsession #PMseekscooperation #Parliamentsmoothfunctioning  #Parliamentmonsoonsession
    ×